யூகி திரைப்படத்தில் இதனால் தான் நடித்தேன்! - நடிகர் கதிர் அளித்த விளக்கம்
யூகி
இயக்குநர் ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி, பவித்ரா லக்ஷ்மி உள்ளிட்டோர் நடிப்பில் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது யூகி.
தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள யூகி திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.
மேலும் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவின் போது நடிகர் கதிர், பேசியதாவது “சுழல் செய்து கொண்டிருக்கும் போது இந்தக்கதை வந்தது. போலீஸ் திரும்ப பண்ணக்கூடாது என இருந்தேன்.
ஆனால் கதை மிகவும் பிடித்திருந்தது. நட்டி, ஆனந்தி, நரேன் என எல்லோரையும் திருப்தி செய்யக்கூடிய கதை. மிக சுவாரஸ்யமான திரைக்கதையாக இருக்கும். பரியேறும் பெருமாளுக்கு பிறகு கயல் ஆனந்தியோடு நடிக்கிறேன். ஆனால் இந்தப்படம் மிக வித்தியாசமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri