லாபத்தை கொடுத்துள்ள கவின் நடித்த டாடா திரைப்படம்- மொத்தமாக எவ்வளவு வசூல் தெரியுமா?
கவினின் டாடா
ஒலிம்பியா மூவிஸின் எஸ்.அம்பேத் குமார் தயாரிப்பில் கணேஷ் கே பாபு இயக்க கடந்த பிப்ரவரி 10ம் தேதி வெளியான திரைப்படம் டாடா.
கவின் மற்றும் அபர்ணாதாஸ் நடிக்க பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் என பலர் நடித்துள்ளார்கள்.
சில பின்னணி கதாபாத்திர படங்கள், சீரியல்கள், பிக்பாஸ் பிறகு கவின் தெளிவாக முடிவு செய்து நடித்த இந்த டாடா படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடிதந்துள்ளது.
பிரபலங்கள் பலரும் படத்தை பார்த்துவிட்டு பாராட்டி வருகிறார்கள். இந்த வருடம் வெளியான படங்களில் நல்ல லாபத்தை கொடுத்த படமாக டாடா அமைந்துள்ளது.
இதுவரை படம் ரூ. 12 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி மகளை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
