ப்ளூ ஸ்டார் படத்தில் இந்த கதாபாத்திரத்திற்கு முதலில் கவின் தான் தேர்வானாரா?
ப்ளு ஸ்டார் படம்
பா.இரஞ்சித் தயாரிப்பில் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியாகி வெற்றிநடைபோடும் திரைப்படம் ப்ளூ ஸ்டார்.
ஜெயக்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அசோக் செல்வன், ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன், ப்ருத்வி ராஜன் என இளம் நடிகர்கள் நடித்துள்ளார்.
கிரிக்கெட்டை மையப்படுத்தி ஒரு முக்கியமான விஷயம் படத்தில் கூறப்பட்டுள்ளது, அதற்கு மக்களின் வரவேற்பும் பெரிய அளவில் வந்துள்ளது.
படத்தின் வெற்றியையும் படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்து கொண்டாடியுள்ளார்கள்.

மிஸ் செய்த கவின்
இந்த படத்தில் அசோக் செல்வன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்ததே வேறொரு நடிகர் தானாம்.
அவர் வேறுயாரும் இல்லை சீரியல்கள், பிக்பாஸ், இப்போது வெள்ளித்திரை என கலக்கிவரும் கவின் தானாம். ஸ்டார் படத்தில் பிஸியாக இருப்பதால் கவினால் நடிக்க முடியாமல் போனதாம்.
அதேபோல் ஸ்டார் படத்தில் முதலில் நடிக்க இருந்ததே ஹரிஷ் கல்யாண் தானாம், அவர் விலகிய காரணத்தால் தான் அவருக்கு பதில் கவின் ஒப்பந்தமானாராம்.

சஞ்சீவி நகர், Y Junction, மாருதி நகர் — 16 ஆண்டுகளாக நீடித்த போக்குவரத்து ஒழுங்கின்மைகளுக்கு தீர்வு! IBC Tamilnadu
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri