மூன்று வயது பெரிய நடிகையை திருமணம் செய்ய ஆசைப்பட்ட மாதவன்.. யார் அந்த நடிகை தெரியுமா
நடிகர் மாதவன்
சாக்லேட் பாய், ரக்கட் பாய் என்ற வார்த்தைகள் 2K தலைமுறையில் அதிகமாக பயன்படுத்துப்பட்டு வருகிறது. அப்படி 90ஸ் காலகட்டத்தில் இருந்து இன்று வரை தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய்யாக ரசிக்கப்பட்டு வருபவர் நடிகர் மாதவன்.
இவர் சமீபகாலமாக படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து 'தி ரயில்வே மேன்' எனும் வெப் சீரிஸ் சமீபத்தில் வெளிவந்துள்ளது.
உண்மை சம்பவத்தை மையாக கொண்டு உருவான இப்படத்தை ஷிவ் ரவாயில் என்பவர் இயக்கியுள்ளார். இந்த வெப் சீரிஸுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாதவனுடன் இணைந்து இந்த வெப் சீரிஸில் ஜூஹி சாவ்லா, Kay Kay Menon, Divyenndu மற்றும் பாபில் கான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
நடிகையை திருமணம் செய்ய ஆசை
இந்நிலையில், தி ரயில்வே மேன் வெப் சீரிஸின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய மாதவன், நடிகை ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டதாக கூறியுள்ளார்.
அவர் பேசுகையில் 'நான் ஒன்று உங்களிடம் சொல்ல வேண்டும். நான் Qayamat Se Qayamat Tak படத்தை பார்த்தபோது நடிகை ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என விருபினேன். இதை என் அம்மாவிடவும் கூறினேன். அன்று என்னுடைய ஒரே நோக்கம் ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்வது மட்டும்' என கூறியுள்ளார்.
நடிகை ஜூஹி சாவ்லா நடிகர் மாதவனை விட மூன்று வயது பெரியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாதவன் கூறிய இந்த விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
