மறைந்த நடிகர் மனோபாலாவின் வாழ்க்கை வரலாறு..இதோ
கோலிவுட்டில் நடிகர் மனோபாலா பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இவர் நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குனர் எனப் பல பன்முகங்களை கொண்டவர். மனோபாலா கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார்.

பிறப்பு
கடந்த 1953 -ம் ஆண்டு மனோபாலா நாகர்கோவில் அருகில் உள்ள ஒரு கிராமத்தில்மனோபாலா பிறந்தார். இவரது இயற்பெயர் பாலச்சந்தர். இவர் தனது ஆரம்பக் கல்வியை பெங்களூரில் முடித்தார். அதன் பின்னர் அரசு நுண்கலைக் கல்லூரியில் படித்தார்.

சினிமா வாழ்க்கை
மனோபாலா கடந்த 1979 -ம் ஆண்டு பாரதிராஜாவின் புதிய வாழ்த்துகள் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
அதன் பின் இவர் ஆகயா கங்கை என்று படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஆனால் இந்த படம் அது பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது.
இதனை அடுத்து இவர் இயக்கிய பிள்ளை நிலா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. 24 திரைப்படங்களை இயக்கிய மனோபாலா, 2000 களில் நடிகராக வலம் வந்தார். மூத்த நகைச்சுவை நடிகர்களான வடிவேலு மற்றும் விவேக் இருவருடன் சேர்ந்து காமெடியில் கலக்கினார்.

தனிப்பட்ட வாழ்க்கை
மனோபாலா உஷா மகாதேவன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இறப்பு
கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த மனோபாலா, கடந்த 3 மே 2023 அன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மரணமடைந்தார்.

ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
எம்ஜிஆர் முதல் முதலமைச்சர் விஜய் வரை.. கொல்லூர் மூகாம்பிகைக்கு வாள் காணிக்கை செலுத்துவது ஏன்? IBC Tamilnadu
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri