கடைசி வரை நிறைவேறாமல் போன நடிகர் மாரிமுத்துவின் ஆசை- இப்படியொரு சோகமா?
நடிகர் மாரிமுத்து
மாரிமுத்து என்ற பெயரை தாண்டி ஆதி குணசேகரனாக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருந்தவர், இப்போது நம்முடன் இல்லை. 57 வயதாகும் மாரிமுத்து அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று காலை செப்டம்பர் 8 உயிரிழந்தார்.
அவரது மரண செய்தி கேட்டதில் இருந்து ரசிகர்கள் அனைவருக்குமே ஓரே வருத்தம் தான். இத்தனை வருடங்கள் சினிமாவில் இருந்தாலும் இப்போது தானே ரீச் ஆனார் அதற்குள் அவரது உயிர் பிரிந்துவிட்டதே என புலம்புகிறார்கள்.
நிறைவேறாத ஆசை
மாரிமுத்து அவர்களுக்கு சொந்த வீட்டில் இருக்க வேண்டும் என்பது கனவாம், அதுவும் அண்மையில் நடந்துள்ளது. சமீபத்தில் ஒரு பேட்டியில் மாரிமுத்து பேசும்போது, எங்களது நீண்ட வருட கனவு தற்போது நிறைவேறிவிட்டது.
மணப்பாக்கம் பகுதியில் எங்களுக்கு சொந்தமாக ஒரு பெரிய வீடு எங்களின் கனவு வீட்டை வாங்கி உள்ளோம், அந்த வீட்டிற்கு என் மனைவியின் பெயரான மலர் என்பதை தான் சூட்ட முடிவு செய்துள்ளோம் என சந்தோஷமாக கூறியுள்ளார்.
புதிய வீட்டின் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்து விட்ட நிலையில், இன்னும் சில மாதங்களில் அந்த வீட்டில் குடியேறவும் மாரிமுத்து முடிவு செய்திருக்கிறார்.
ஆனால் அந்த கனவு இல்லத்திற்கு செல்வதற்கு முன்பாகவே அவர் உயிரிழந்துள்ள சோகம் நடந்துள்ளது.