மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன்கள் இந்த படங்களில் நடித்துள்ளார்களா?- எத்தனை பேருக்கு தெரியும்
நடிகர் மயில்சாமி
தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு பெரிய துக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இரண்டு நாட்களுக்கு முன் வந்த தகவல் நடிகர் மயில்சாமியின் உயிரிழப்பு.
இவர் ஞாயிற்றுக்கிழமை சிவராத்திரி பூஜையில் கலந்துகொண்டு வீடு திரும்பும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவரின் மரண செய்தி கேட்டதுமே அனைவரும் அதிர்ச்சியடைந்துவிட்டார்கள்.
சில மணி நேரத்திற்கு முன் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய இவருக்கு இப்படியொரு சோகமா என அனைவருமே வருந்தினார்கள்.
மகன்கள் நடித்த படம்
மயில்சாமி அவர்களின் மரணத்திற்கு பிறகு அவரது குடும்பம் குறித்து நிறைய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. மயில்சாமி அவர்களுக்கு அன்பு மற்றும் யுவன் என இரு மகன்கள் உள்ளார்கள்.
இருவருமே தமிழ் சினிமாவில் படங்களும் நடித்துள்ளார்களாம். மூத்த மகன் அன்பு அல்டி மற்றும் சிதம்பரம் ரயில்வே கேட் என இரு படங்களில் நடித்துள்ளாராம்.
அவரது இளைய மகன் யுவன் பா.ரஞ்சித் தயாரித்து வரும் தண்டகாரண்யம் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
என்னது லோகேஷ் கனகராஜிற்கு திருமணம் ஆகி குழந்தைகளே உள்ளார்களா?

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri
