பிரபல நடிகர் எம் எஸ் பாஸ்கரின் வாழ்க்கை வரலாறு.. இதோ
எம்.எஸ்.பாஸ்கர்
தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் எம்.எஸ்.பாஸ்கர். நகைச்சுவையான கதாபாத்திரம் மட்டுமின்றி எமோஷனலான ரோல்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.
தற்போது ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகியுள்ள பார்க்கிங் படத்தில் முக்கியமான ரோலில் எம் எஸ் பாஸ்கர் நடித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.
பிறப்பு
எம்.எஸ்.பாஸ்கர் கடந்த 1957 -ம் ஆண்டு நாகப்பட்டினத்தில் பிறந்தார். தமிழகத்தில் நவீன நாடக நாடகங்களை நிகழ்த்திய 'புதிய நாடகத்திற்கான சங்கம்' என்ற தமிழ் நாடகக் குழுவில் உறுப்பினராக எம் எஸ் பாஸ்கர் இருந்தார். அதன் பின் தெலுங்கு மற்றும் ஆங்கில படங்களை தமிழில் டப்பிங் செய்து வந்தார்.
சினிமா வாழ்க்கை
நடக கலைஞராக இருந்த எம் எஸ் பாஸ்கர், கடந்த 1987 -ம் ஆண்டு வெளியான "திருமதி ஒரு வெகுமதி" திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
90 களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த எம் எஸ் பாஸ்கருக்கு "எங்கள் அண்ணா" திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது.
எம் எஸ் பாஸ்கர் "மொழி" படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதையும், 2017 ஆண்டு வெளிவந்த "8 தோட்டாக்கள்" படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதையும் வென்றார் .
குடும்பம்
எம்.எஸ்.பாஸ்கர் ஷீலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
எம் எஸ் பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா, பல முன்னணி ஹீரோயின்களுக்கு டப்பிங் கலைஞராக உள்ளார். அவரது மகன் ஆதித்யா பாஸ்கர் 96 படத்தில் விஜய் சேதுபதியின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)
வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்? News Lankasri
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)
புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு News Lankasri
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)