முகுல் தேவ் மரணம்
இந்தி, பெங்காலி மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில் படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகர் முகுல் தேவ். இவருக்கு வயது 54. இவர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
முகுல் தேவ் மரணத்தை அவருடன் இணைந்து நடித்த நடிகர் விந்து தாரா சிங் என்பவர் உறுதி செய்துள்ளார். இவருடைய மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விந்து தாரா சிங் பதிவு
முகுல் தேவ் தனது பெற்றோரின் மறைவுக்கு பின் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டார். அவர் கடந்த சில நாட்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய சகோதரர் மற்றும் அவரை நன்கு தெரிந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்றும் விந்து தாரா சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”என் சகோதரர் முகுல் தேவ் ஆன்மா சாந்தியடைய வேண்டி கொள்கிறேன். உங்களுடன் செலவழித்த நேரம் எப்போதும் நேசத்துக்குரியதாக இருக்கும். சன் ஆப் சர்தார் 2 படம் அனைவரையும் மகிழ்ச்சியடைய வைக்கும்" என நடிகர் விந்து தாரா சிங் பதிவிட்டுள்ளார்.
Rest in peace my brother #MukulDev ! The time spent with you will always be cherished and #SonOfSardaar2 will be your swansong where you will spread joy and happiness to the viewers and make them fall down laughing ! pic.twitter.com/oyj4j7kqGU
— Vindu Dara Singh (@RealVinduSingh) May 24, 2025