விராட் கோலியை சந்தித்த சிம்பு.. கண்டுகொள்ளாமல் போன சம்பவம்! இப்படி நடந்ததா
சிம்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிம்பு தற்போது கமல் ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை மணி ரத்னம் இயக்கியுள்ளார்.
த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், நாசர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜூன் 5ம் தேதி திரையரங்கில் வெளிவருகிறது.
தக் லைஃப் படத்தின் ப்ரோமோஷனில் படக்குழுவினர் முழுமூச்சாக இறங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டுமின்றில் கேரளா, ஆந்திரா, மும்பை என பல்வேறு இடங்களில் ப்ரோமோஷன் நடைபெற்று வருகிறது. இதில் பல சுவாரஸ்யமான விஷயங்களை படக்குழுவினர் பகிர்ந்து வருகிறார்கள்.
விராட் கோலியை சந்தித்த சிம்பு
இந்த நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடந்த பேட்டியில், விராட் கோலியுடன் தனக்கு ஏற்பட்ட சந்திப்பு குறித்து சிம்பு வெளிப்படையாக பேசினார். இதில், "விராட் கோலியின் ஆரம்ப கட்டத்திலேயே நான் சொன்னேன், இவர் தான் அடுத்த சச்சின் என்று. பலரும் கிண்டல் செய்தனர். ஆனால், அவர் இப்போது அந்த இடத்திற்கு வந்துவிட்டார்.
ஒரு முறை அவரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது அவரிடம் சென்று கைகொடுத்தேன், யார் என்று கேட்டார், நான் சிம்பு என சொன்னதும், எனக்கு தெரியாது என கூறிவிட்டு சென்றுவிட்டார்.
அப்போது இது உனக்கு தேவையா என கேட்டு கொண்டேன். ஆனால், ஒரு நாள் நான் யார் என உங்களுக்கு தெரியவரும் என நினைத்துக்கொண்டேன். சமீபத்தில் ஆர்சிபி ரீல் வந்தது. அதில் என் படத்தின் பாடலை பற்றி விராட் கோலி பேசினார். அதுவே சக்ஸஸ் தான். ஆனால், இப்பவும் அவருக்கு என்னை தெரியுமா என தெரியவில்லை" என அந்த வேடிக்கையான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் சிம்பு.