அந்த நடிகை என் வீட்டில் தான் தங்குவார், மனைவிக்கு தெரியும்.. நாகர்ஜுனா ஓபன் டாக்
நாகர்ஜுனா
தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகர் நாகர்ஜுனா. தற்போது, இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அதை தொடர்ந்து, தனுஷ் நடித்துள்ள குபேரா படத்திலும் நடித்துள்ளார். 65 வயதிலும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக வலம் வரும் நாகர்ஜுனா திருமணத்திற்கு பின் பல ஹீரோயின்களுடன் கிசுகிசுக்கப்பட்டார்.
ஓபன் டாக்
இந்நிலையில், ஒரு நடிகையுடன் மட்டும் இரவு நேரத்தில் போன் செய்து பேசுவார் என்று நாகர்ஜுனா கூறியுள்ளார். அந்த நடிகை வேறு யாருமில்லை தபு தான்.
இவர்கள் இருவரும் இணைந்து சிசிந்திரி, ஆவிட மா ஆவிட, நின்னே பெள்ளாடதா ஆகிய படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.
இது குறித்து நாகர்ஜுனா கூறுகையில், " எனக்கும் தபுக்கும் நல்ல உறவு இருக்கிறது. அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர். அந்த நட்பு எப்படி என்றால் அவர் எப்போது ஹைதராபாத்துக்கு வந்தாலும் என் வீட்டுக்கு வருவார்.
என் வீட்டுக்கு எதிரிலேயே வீடு வாங்கியுள்ளார். அவருக்கு ஏதாவது பிரச்சனை என்றால் என் பர்சனல் நம்பருக்கு போன் செய்வார். அது இரவு நேரமாக இருந்தாலும் சரி. என் மனைவிக்கு இது குறித்து நன்றாக தெரியும்" என்று கூறியுள்ளார்.

நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு- இதெல்லாம் நடக்க காரணம் இவர்தானா? Manithan
