நடிப்பு அரக்கன் நாகேஷின் வாழ்க்கை வரலாறு..
பிறப்பு - படிப்பு
தமிழ் சினிமா ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட நடிகர் நாகேஷின் முழு பெயர் நாகேஸ்வரன் ராவ். இவர் தமிழ்நாடு, தாராபுரம் பகுதியில் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்துள்ளார்.
கிருஷ்ணன் ராவ் - ருக்மணி அம்மாள் தான் இவருடைய தாய், தந்தை ஆவார்கள். இவருடைய தந்தை கிருஷ்ணன் ராவ் கர்நாடகாவில் உள்ள அரிசிக்கரே என்ற ஊரின் ரயில் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றிவந்துள்ளார்.
தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பை படித்து முடித்துவிட்டு கோவை பி.எஸ். ஜி கலைக்கல்லூரியில் படிக்க துவங்கினார். இரண்டாம் ஆண்டு படிக்க துவங்கியபோது அம்மை நோய் காரணமாக முகத்தில் தழும்புகள் உண்டாகி இருக்கிறது.
பின் நாகேஷ் கோவையில் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு தனது தந்தையை போலவே ரயில்வேயில் பணிபுரிய துவங்கியுள்ளார்.
சினிமா வாழ்க்கை
திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் வரை திருப்பூர் ரயில் நிலையத்தில் எழுத்தாளராக பணிபுரிந்து வந்துள்ளார். சிறுவயது முதல் நடிப்பில் ஆர்வம் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்துள்ளார்.
1959ஆம் ஆண்டு திரையுலகில் காலடி எடுத்துவைத்த இவர் தாமரைக்குளம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிக்க துவங்கினார். அதன்பின் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு கே. பாலச்சந்தரின் சர்வர் சூத்ரம் திரைப்படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
இதன்பின் நீர்க்குமிழி, காதலிக்க நேரமில்லை, எதிர்நீச்சல் என ஒவ்வொரு படத்திலும் தனது முத்திரையை பதித்தார். திருவிளையாடலில் தருமி கதாபாத்திரம், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
மேலும் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆர், சிவாஜி மட்டுமின்றி ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித், மாதவன் என பல தலைமுறை நாயகர்களுடன் இணைந்து நடித்துவிட்டார். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நாகேஷ், கமலின் நடிப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த தசாவதாரம் திரைப்படத்தில் கடைசியாக தோன்றினார்.
1952ல் ரெஜினா ராவ் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகர் நாகேஷுக்கு ரமேஷ் பாபு, ராஜேஷ் பாபு, ஆனந்த் பாபு என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
திரையுலகினரால் தலைமேல் தூக்கிவைத்து கொண்டாடப்பட்ட சிறந்த கலைஞன் நாகேஷ் கடந்த 2009ஆம் ஆண்டு தன்னுடைய 75வது வயதில் மரணமடைந்தார். இவருடைய மரணம் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
நாகேஷ் வாங்கிய விருதுகள்
- கலைமாமணி விருது
- சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது - நம்மவர்
- தமிழ்நாடு மாநில திரைப்பட விருது - சிறப்பு பரிசு - நம்மவர்
-
பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)
வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்? News Lankasri
![காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ!](https://cdn.ibcstack.com/article/c1d21af1-2fff-4bfb-83b3-302037d7322b/25-67aab54214712-sm.webp)
காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ! IBC Tamilnadu
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)