நான் மட்டும் நடித்திருந்தால் அந்த நடிகர் பிரபலமாகி இருக்கமாட்டார்!! நகுல் ஓபன் டாக்..
நகுல்
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2003 -ம் ஆண்டு வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் நகுல்.
இதனை அடுத்து இவர் மாஸ் என்கிற மாசிலாமணி, காதலில் விழுந்தேன், கந்தக்கோட்டை, வல்லினம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நகுல் நடிகர் மட்டுமின்றி பாடகரும் ஆவர்.
பேட்டி
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நகுல், பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, "எனக்கு ஒரு பட வாய்ப்பு வந்தது. சில காரணத்தால் அந்த படத்தில் நடிக்கவில்லை".
"நான் மட்டும் அந்த படத்தில் நடித்திருந்தால் இன்று ஒரு உச்சத்தில் இருக்கும் நடிகர் சினிமாவில் இருந்திருக்கவே மாட்டார். அந்த அளவுக்கு முக்கியமான காதாபாத்திரம். ஆனால் யார் அந்த நடிகர் என்பதை நான் சொல்ல மாட்டேன் "என்று நகுல் கூறியுள்ளார்.

தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள்; எப்போது முதல்? எங்கே இருந்து இயங்கும்? - அமைச்சர் அறிவிப்பு IBC Tamilnadu

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
