Actor nana patekar passes away: பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலமானார். அவருக்கு வயது 75.
நானா படேகர்
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நானா படேகர். இவர் தமிழில் வெளியான பொம்மலாட்டம், காலா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காலமானார்
கோவாவில் உள்ள தனது வீட்டில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நடிகர் நானா படேகரை, உடனே அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் பரிசோதனையின் பின் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட ஆய்வின்படி, அவருக்குக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட பிறகு மருத்துவர்கள் 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக அவருக்கு சிபிஆர் (CPR) அளித்தும், அவரை மீண்டும் உயிர் பெறச் செய்ய முடியவில்லை. மேலும், ஒரு மருத்துவ-சட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் நானா படேகரின் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.
எம்ஜிஆர் முதல் முதலமைச்சர் விஜய் வரை.. கொல்லூர் மூகாம்பிகைக்கு வாள் காணிக்கை செலுத்துவது ஏன்? IBC Tamilnadu
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும்; சிபிஎம் சண்முகம் வலியுறுத்தல் IBC Tamilnadu
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri