தடபுடலாக தனது மனைவியின் 50வது பிறந்தநாளை கொண்டாடிய நெப்போலியன்
நடிகர் நெப்போலியன்
தென்னிந்திய சினிமாவில் உயர்ந்த நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் என்ட்ரீ கொடுத்த இவர் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி பிற மொழி படங்களிலும் நடித்துள்ள இவர் அரசியலிலும் கால் பதித்துள்ளார். அண்மையில் நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் கட்டியுள்ள வீடு பற்றியும், திருநெல்வேலியில் அவர் கட்டிய மருத்துவமனை குறித்தும் வீடியோ வெளியாகி இருந்தது.
மனைவி பிறந்தநாள்
இந்த நேரத்தில் நடிகர் நெப்போலியன் தனது மனைவியின் 50வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அமெரிக்காவில் தனது நண்பர்களுடனும், தன்னிடம் பணிபுரிபவர்களுடன் கொண்டாடியிருக்கிறார்.
தடபுடலாக விருந்து வைத்து, நிறைய விலையுயர்ந்த பரிசு கொடுத்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
40 வயதில் நடிகைகளுக்கு இணையாக போட்டோ ஷுட் நடத்திய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்- அசந்துபோன ரசிகர்கள்