தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல வில்லன் நடிகர்!

By Parthiban.A Jun 28, 2022 03:30 PM GMT
Report

சினிமாத்துறையில் நடிகர்கள் தற்கொலை தொடர்கதையாகிவிட்டது. இது சினிமா ரசிகர்களுக்கு தொடர்ந்து சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது பிரபல மலையாள வில்லன் நடிகர் என்.டி.பிரசாத் தற்கொலை செய்துகொண்டிருப்பது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.

நிவின் பாலியின் ஆக்ஷன் ஹீரோ பிஜு படத்தில் நடித்து பிரபலமான அவர் அதற்கு பிறகு பல படங்களில் நடித்தார்.

43 வயதாகும் அவர் நேற்று முன்தினம் இரவு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவர் வீட்டருகில் இருக்கும் மரத்தில் உடலை அவரது குழந்தைகள் பார்த்திருக்கின்றனர்.

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல வில்லன் நடிகர்! | Actor Nd Prasad Dies By Suicide

போலீசார் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து அதன் பின் உடலை ஒப்படைத்து இருக்கின்றனர். தற்கொலைக்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சனை காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

மலையாள சினிமா துறை பிரபலங்கள் பலரும் பிரசாத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US