நடிகர் நெப்போலியனின் மருமகள் யார் தெரியுமா?
நெப்போலியன்
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பிறகு கதாநாயகனாக தொடர்ந்து நடித்து வந்தவர் தான் நடிகர் நெப்போலியன்.
இவர், ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில் மூத்த தனுஷ் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். மகனின் சிகிச்சைக்காக அமெரிக்க சென்ற நெப்போலியன் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
இந்நிலையில் மூத்த மகன் தனுஷூக்கு அக்ஷயா என்கிற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான வீடியோவை தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
நெப்போலியனின் வருங்கால மருமகள் அக்ஷயா திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த ஜோடிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
