யூடியூபில் வந்த தனது மரண செய்தி குறித்து நடிகர் பார்த்திபனே போட்ட பதிவு- என்ன கூறியுள்ளார் பாருங்க
நடிகர் பார்த்திபன்
சமூக வலைதளம் என்பது இப்போது ஒரு கட்டுப்பாடு இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
அதற்கு முன் பிரபலங்கள் மீது பெரிய மரியாதை இருக்கும், ஆனால் எப்போது சமூக வலைதளம் வந்ததோ, சுதந்திர பேச்சு என வந்ததோ அப்போதில் இருந்து நிறைய சர்ச்சைகள், பிரச்சனைகள் வந்துகொண்டிருக்கின்றன.
அதிலும் யூடியூப் பக்கங்கள் குறித்து சொல்லவே வேண்டாம், இப்போது ஒரு பிரபலம் மரணம் என்றே ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகரின் பதிவு
பல பிரபலங்கள் இறந்துவிட்டார்கள் என வந்த நிலையில் இப்போது நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் இறந்துவிட்டார் என்ற செய்தி யூடியூபில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டரில், நொடிகள் மரணமடைவதும், மறுபடியும் அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை! நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலமாவதன் காரணம் புரியவில்லை! Negativity-ஐ பரப்ப இதுபோல் சில நண்பர்கள் இருக்கிறார்கள்.
மகிழ்ச்சியை மனதில் நிரப்புவோம் மக்களுக்கும் பரப்புவோம்! என பதிவு செய்துள்ளார்.
நொடிகள் மரணமடைவதும்,மறுபடியும் அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை! நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலமாவதன் காரணம் புரியவில்லை! Negativity-ஐ பரப்ப இதுபோல் சில நண்பர்கள் இருக்கிறார்கள்.மகிழ்ச்சியை மனதில் நிரப்புவோம் மக்களுக்கும் பரப்புவோம்! https://t.co/JmQqrxFL9K
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 23, 2023
துணிவு மற்றும் வாரிசு படங்கள் தமிழகத்தில் இதுவரை செய்துள்ள வசூல்- டாப் கலெக்ஷன் எந்த படம்?
முடக்கப்பட்டுள்ள நிதியைத் தொட்டுப்பாருங்கள்... ஐரோப்பாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த புடின் News Lankasri
திமுக மீது விமர்சனம் இருந்தாலும் கூட்டணியில் தொடர காரணம் இதுதான் - திருமாவளவன் விளக்கம் IBC Tamilnadu