சிகிச்சை பலனின்றி நடிகர் பூ ராமு மரணம்! சினிமா துறையினர் அதிர்ச்சி
பிரபல குணசித்திர நடிகர் பூ ராமு மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்றுமுன் மரணமடைந்தார்.
சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது என்றும், ஐசியூ வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தகவல் வந்தது.
இந்நிலையில் சற்றுமுன் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது மறைவு சினிமா துறையினருக்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்ணன், பரியேறும் பெருமாள், சூரரைப்போற்று உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். அவர் பூ என்ற படத்தில் நடித்து பபாலர் ஆனதால் அவருக்கு பூ ராமு என்றே பெயர் வந்தது.