கண்கலங்க வைக்கும் பவர் ஸ்டாரின் நிஜ வாழ்க்கை.. இவ்ளோ கஷ்டங்களா !
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவர் தான் பவர் ஸ்டார். இவர் 2011 -ம் வெளியான லத்திகா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இப்படத்திற்கு மக்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர்.
இதையடுத்து சந்தானம் நடிப்பில் 2013 -ம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன அசையா படத்தில் நடித்து அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பாப்புலர் ஆனார். தற்போது சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பவர் ஸ்டார் அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், " நான் சினிமாவில் வருவதற்கு முன்பு அக்கு பஞ்சர் மருத்துவராக இருந்தேன். அதில் கிடைத்த வருமானத்தை வைத்து தான் லத்திகா படத்தை தயாரித்தேன்".
"என்னிடம் பணம் இருக்கும் சமயத்தில் நண்பர்கள் மட்டும் உறவினர்கள் எல்லாரும் என் கூட இருந்தார்கள் ஆனால் பணம் இல்லாத நேரத்தில் யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை. ஒருமுறை என்னுடைய உறவினர்கள் என்னை கடத்தி பணம் பறிக்க முயன்றார்கள்" என்று பவர் ஸ்டார் கூறியுள்ளார்.
கண்கலங்க வைக்கும் பவர் ஸ்டாரின் நிஜ வாழ்க்கை.. இவ்ளோ கஷ்டங்களா !