நடிகர் பிரபாஸ் 45வது பிறந்தநாள்.. அவருடைய முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா
நடிகர் பிரபாஸ்
தெலுங்கு திரையுலகில் மட்டுமே பிரபலமாக வலம் வந்த நடிகர் பிரபாஸ், ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தில் நடித்து உலகளவில் பிரபலமானார். குறிப்பாக இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக உயர்ந்தார்.
தொடர்ந்து வெளிவந்த பாகுபலி 2 உலகளவில் ரூ. 1,800 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன்பின் சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார், கல்கி 2898 AD ஆகிய படங்களில் நடித்தார்.

மேலும் தற்போது ராஜா சாப் எனும் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். அடுத்ததாக இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகும் ஸ்பிரிட் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
45வது பிறந்தநாள் - சொத்து மதிப்பு
இன்று நடிகர் பிரபாஸின் 45வது பிறந்தநாள். ரசிகர்களும் திரையுலக நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், அவருடைய சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது, அதை பற்றி பார்க்கலாம் வாங்க. நடிகர் பிரபாஸின் முழு சொத்து மதிப்பு ரூ. 260 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவருக்கு சொந்தமான, ரூ. 60 கோடி மதிப்புள்ள பிரமாண்ட வீடு ஒன்று ஹைதராபாத்தில் உள்ளது.

இவர் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க ரூ. 100 கோடி முதல் ரூ. 200 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri