பிரம்மாண்ட நகை கடை என சம்பாதிக்கும் நடிகர் பிரசாந்த் முழு சொத்து மதிப்பு- எவ்வளவு தெரியுமா?
பிரசாந்த்
தமிழ் சினிமாவில் 90களில் பல பெண்களின் கனவு கண்ணனாக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த்.
1990ம் ஆண்டு வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, பார்த்தேன் ரசித்தேன், வண்ண வண்ண பூக்கள், செம்பருத்தி, வின்னர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நாயகனாக முன்னேறினார்.
இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்த ஜீன்ஸ் திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
டாப் நாயகனாக வலம் வந்த காலத்தில் அதாவது கடந்த 2006ம் ஆண்டு இவருக்கு கிரகலட்சுமி என்பவருடன் திருமணம் நடந்தது, ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

சொத்து மதிப்பு
திருமணம், விவாகரத்து என அவரது சினிமா பயணத்திற்கு பிரச்சனையாக அமைந்தது. திரையுலக வாழ்க்கை தற்போது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை என்றாலும் இவருக்கு ஒவ்வொரு மாதமும் கோடிகளில் பணம் வருகிறது.
காரணம் தி.நகரில் பிரமாண்டமாக பிரசாந்த் கோல்டு டவர் என்கிற 17 மாடிகள் கொண்ட பிரமாண்ட கட்டிடம் உள்ளது. அதில் தான் உலகின் மிகப்பெரிய ஷோரூம்மான ஜோய் ஆலுக்காஸ் இயங்கி வருகிறது.
ஆடி, பிஎம்டபிள்யூ என இறக்குமதி செய்யப்பட்ட பல சொகுசு கார்களை வைத்து இருக்கும் இவருக்கு சென்னை, மதுரை, கோவை என பல இடங்களில் சொந்தமாக பல வீடுகள் உள்ளன.
இவரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.85 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் - நயினார் நாகேந்திரன் விமர்சனம் IBC Tamilnadu
மெக்சிகோவிலிருந்து 1.3 மில்லியன் மதிப்புள்ள..கடத்தலில் ஈடுபட்ட அவுஸ்திரேலியர் அதிரடி கைது News Lankasri