படங்களை தாண்டி பல கோடி சம்பாதிக்கும் நடிகர் பிரசாந்த்- அவரின் முழு சொத்து மதிப்பு விவரம் இதோ
நடிகர் பிரசாந்த்
நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் மகன் என்ற அடையாளத்தோடு வைகாசி பொறந்தாச்சு படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் பிரஷாந்த்.
தமிழ் சினிமாவை ஒரு காலத்தில் ஆண்டுவந்த நடிகர் பிரஷாந்த் தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். 90களில் சாக்லெட் பாயாக வலம் வந்த இவருக்கு பெண் ரசிகைகள் கூட்டம் அதிகம் இருந்தனர்.
ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் படம் மூலம் பெரிய வெற்றியை கண்ட இவர் அதன் பிறகு நடித்த ஜோடி, ஸ்டார், சாக்லேட், மஜுனு, தமிழ், குட்லக் போன்ற படம் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன.
கிரஹலட்சுமி என்பவரை திருமணம் செய்த பிரசாந்த் திரைப்பயணம் அதற்கு பிறகு மோசம் அடைந்தது.
சொத்து மதிப்பு
தி.நகரில் பிரம்மாண்டமாக பிரசாந்த் கோல்டு டவர் என்கிற 17 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட கட்டிடம் உள்ளது. அதில் உலகின் மிகப்பெரிய ஷோரூம்மான ஜாய் ஆலுக்காஸ் இயங்கி வருகிறது.
இதுதவிர பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ள பிரசாந்த் மாதம் பல லட்சங்கள் சம்பாதிக்கிறாராம். மொத்தத்தில் அவரது சொத்து மதிப்பு ரூ. 85 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.