குடும்பத்தாரால் நிறைவேற்றப்பட்ட பிரதாப் போத்தனின் கடைசி ஆசை- என்ன தெரியுமா?
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்களிடம் பிரபலமானவர் பிரதாப் போத்தன்.
1978ம் ஆண்டு ஆரவம் என்ற மலையாள படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பிரதாப் வெற்றிவிழா, மைடியர் மார்தாண்டன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட 12 படங்களை இயக்கியிருந்தார்.
70 வயதான பிரதாப் போத்தன் கடந்த சில மாதங்களாக அவர் மன உளைச்சலில் இருந்திருப்பது அவரது பேஸ்புக் பதிவின் மூலம் தெரிகிறது.
மரணம் நாம் தினமும் எச்சில் விழுங்குவதால் ஏற்படுகிறது என சில வருத்தமான பதிவுகளை பதிவு செய்து வந்த பிரதாப் இறந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
கடைசி ஆசை
பிரதாப் போத்தன் உடல் கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால் தனது உடலை அடக்கம் செய்ய வேண்டாம், தகனம் செய்ய வேண்டும் என முன்பே தனது குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார்.
அதன்படி அவரது உடல் வேலங்காடு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
பாடகர் எஸ்.பி.பி சரணுக்கு இப்படி ஒரு சோகமா?- அவரே சொன்ன சோகமான விஷயம்

Rasipalan: இன்னும் ஒரு வாரத்தில் அதிர்ஷ்டத்தை கொட்டப்போகும் செவ்வாய் பெயர்ச்சி- உங்க ராசி இருக்கா? Manithan

பாக்கியாவிற்கு சம்பந்தியாகும் செல்வி- அடுத்தக்கட்டத்திற்கு சென்ற காதல்.. ஈஸ்வரி ஏற்றுக் கொள்வாரா? Manithan
