பாடகர் எஸ்.பி.பி சரணுக்கு இப்படி ஒரு சோகமா?- அவரே சொன்ன சோகமான விஷயம்
இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் பாடகர்களில் ஒருவர் எஸ்.பி. பாலசுப்ரமணியன்.
தமிழக மக்களால் கொண்டாடப்பட்ட இவர் 2020ம் ஆண்டு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு செப்டம்பர் 25ம் தேதி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இவரது மகன் சரண் சினிமாவில் பாடுவது, படங்கள் தயாரிப்பது, நடிப்பது என பல வேலைகளை செய்துள்ளார்.
சரண் கொடுத்த பேட்டி
சினிமாவில் அறிமுகமாகி 25 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். அவர் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுக்க அது வைரலாகி வருகிறது.
அதில் அவர், நான் அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடல்கள் பாடியிருக்கிறேன். ஒரு காலத்தில் நிறைய வாய்ப்புகள் வந்தது, நான் பாடிய பாடல்களையும் ரசிகர்கள் ஹிட் கொடுத்தார்கள்.
ஆனால் இப்போதெல்லாம் வாய்ப்புகள் வருவதில்லை, அது ஏன் என்றும் தெரியவில்லை, என்னால் பாட முடியாது என்று எப்போதும் கூறியதில்லை. அழைப்பு வந்தால் உடனே இங்கு வந்து விடுவேன்.
இருந்தாலும், எனக்கு ஏன் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி ஆகவே எனக்கு இருக்கிறது என்றார். தமிழில் ஒரு படம் தயாரித்து வருவதாகவும் விரைவில் அறிவிப்பு வரும் எனவும் கூறியுள்ளார்.
Blue Sattai மாறனுக்கு பதிலடி கொடுத்த நடிகர் பார்த்திபன்- வைரலாகும் அவரது பதிவு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு; நல்லா இருக்குய்யா உங்க ரகசிய கூட்டு - விஜய்யை வெளுத்த பிரபலம் IBC Tamilnadu
