பழம்பெரும் நடிகர் முத்துராமன் அவர்களின் மகன் யார் தெரியுமா?- அவரும் ஒரு டாப் நடிகரா?
நடிகர் முத்துராமன்
பழம்பெரும் நடிகர்கள் பலரை மக்கள் இப்போதும் நியாபகம் வைத்துள்ளார்கள். சிவாஜி கணேசன், எம்ஜிஆர் தொடங்கி நாகேஷ், நம்பியார் என பல நடிகர்கள் பற்றி மக்கள் பேசுகிறார்கள்.
அந்த வகையில் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் முத்துராமன்.1960 முதல் 1970 முன்னணி நடிகராக இருந்துள்ளார்.
நடிகர் எஸ்.வி.சகஸ்ரநாமம் நடத்தி வந்த சேவா ஸ்டேஜ் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
நவரச திலகம் எனவும் அழைக்கப்பட்டுள்ளார்.
குடும்பம்
சுலோசனா என்பவரை திருமணம் செய்துகொண்ட முத்துராமன் அவர்களுக்கு 4 பிள்ளைகள்.
அதில் ஒருவர் சினிமாவில் நவரச நாயகன் என்ற பட்டத்துடன் வலம் வந்த கார்த்திக் ஆவார். இப்போதும் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்கும் சினிமாவில் நுழைந்து படங்கள் நடித்து வருகிறார்.
10 வருடத்திற்கு பிறகு தனது சொந்த ஊர் சென்றுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்- இதுதான் அவரது வீடா?