நடிகர் ரஜினிகாந்தின் முழு சொத்து மதிப்பு, பயன்படுத்தும் கார் மற்றும் சொந்த வீடு.. முழு விவரம் இதோ
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்பட்டடு வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் படம் வெளிவரவுள்ளது. நெல்சன் இயக்கும் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
ஜெயிலர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கவிருக்கும் லால் சலாம் படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். இப்படத்தில் 7 நாட்கள் நடிக்க ரூ. 25 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம்.
லால் சலாம் படத்திற்கு பின் லைக்கா நிறுவனத்தின் படத்தில் தான் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். ஆனால், இதுவரை இப்படத்தை இயக்கப்போவது யார் என்று தெரியவில்லை.
ஒரு பக்கம் இப்படத்தை இயக்கப்போவது TJ ஞானவேல் என்று கூறப்பட்டு வந்தாலும், அதுவும் உறுதியாக தெரியவில்லை. விரைவில் இதற்கான அறிவிப்பு படக்குழுவிடம் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு, கார், வீடு
இந்நிலையில், போயஸ் கார்டனில் உள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டின் புகைப்படங்கள், அவர் பயன்படுத்தும் கார் மற்றும் அவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. வாங்க அதை பார்க்கலாம்.
நடிகர் ரஜினிகாந்தின் முழு சொத்து மதிப்பு ரூ. 410 முதல் ரூ. 450 கோடி வரை இருக்கும் என தகவல் தெரிவிக்கின்றனர்.
ரஜினிகாந்த் முதல் கார்
ரஜினிகாந்த் பயன்படுத்தும் கார்
ரஜினிகாந்தின் வீடு
மகன் சஞ்சய் இப்படி தான் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்ட விஜய்.. ஆனால் அது நடக்கவில்லை