நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கோடியா!
ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் இந்த ஆண்டு கூலி படம் வெளிவந்தது. விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்தாலும், வசூலில் ரூ. 500+ கோடி வசூல் செய்திருந்தது.
இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினி நடித்து வரும் படம் ஜெயிலர் 2. இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதன்பின், கமலுடன் இணைந்து ரஜினிகாந்த் நடிக்கப்போகிறார். ஆனால், இயக்குநர் இன்னும் உறுதி செய்யப்படாததால் அறிவிப்பு வெளிவர தாமதம் ஆவதாக சொல்லப்படுகிறது.
ரஜினியின் வீடு
போயஸ் கார்டனில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் வீடு இருப்பதை அனைவரும் அறிவோம். ஆனால், அந்த வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
இந்நிலையில், அதுகுறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டின் விலை மதிப்பு ரூ. 40 கோடி - ரூ. 50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.