இன்று பிறந்தநாள் கொண்டாடும் வேட்டையன் பட வில்லன் ராணா டகுபதியின் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா
ராணா டகுபதி
பாகுபலி என்ற படத்தின் மூலம் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலம் ஆன நடிகர்களில் ஒருவர் ராணா டகுபதி. பிரபலமான குடும்பத்தில் இருந்து நடிக்க வந்து சினிமாவில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.
ராணா டகுபதி.த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என பலர் நடித்து சமீபத்தில் வெளியான வேட்டையன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார்.
சொத்து மதிப்பு
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ராணா டகுபதியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, தமிழ் மற்றும் ஹிந்தியில் நடித்துவரும் படங்களுக்கு ரூ. 3 முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.
மேலும் விளம்பர படங்களுக்கு ரூ. 70 லட்சம் முதல் ரூ. 80 லட்சம் வரை சம்பளம் வாங்கும் இவர் வருடத்திற்கு ரூ. 8 கோடி வரை சம்பாதித்து வருகிறார். அந்த வகையில், பிஸியாக சினிமாவில் பணியாற்றிவரும் ராணா டகுபதியின் சொத்து மதிப்பு ரூ. 45 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.