பல நடிகர்கள் அரசியல்வாதிகளாக.. நடிகர் ரவி மோகன் பேச்சால் பரபரப்பு
ரவி மோகன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ரவி மோகன். இவர் நடிப்பில் சைரன், இறைவன், பிரதர் ஆகிய பல படங்கள் வெளியானது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் காதலிக்க நேரமில்லை.
இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கிய இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நித்யா மேனன் நடித்திருந்தார்.
தற்போது, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் 'பராசக்தி' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பரபரப்பு
இந்நிலையில், திமுக சார்பில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் ரவி மோகன் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " இங்கு பல அரசியல்வாதிகள் உள்ளார்கள். பல நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறி இருக்கிறார்கள், ஆனால் நான் எப்போதும் போல நடிகனாகவே இருக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.