நடிகர் ரியோ ராஜின் மகளா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே?- லேட்டஸ்ட் க்ளிக்
ரியோ ராஜ்
சன் மியூசிக் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் தொகுப்பாளர்களாக வளர்ந்தவர்கள் பலர் உள்ளார்கள்.
அதில் ஒருவர் தான் ரியோ ராஜ், பல வருடங்கள் இசை தொலைக்காட்சியில் பணியாற்றிய அவர் பின் விஜய் டிவி பக்கம் முதலில் சின்னத்திரை நடிகராக வந்தார்.
சரவணன்-மீனாட்சி என்ற தொடரில் நாயகனாக நடித்தார். அதன்பின் விஜய் தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார், பிக்பாஸ் 3வது சீசனிலும் கலந்துகொண்டார்.
அதேபோல் சத்ரியன், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, காதல் ஒன்று கண்டேன், பிளான் பண்ணி பண்ணனும், ஜோ போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.
திருமணம்
நடிகர் ரியோ ராஜ் சரவணன்-மீனாட்சி தொடர் நடித்துக் கொண்டிருக்கும் போது தனது நீண்டநாள் காதலியான ஸ்ருதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகளும் உள்ளார்.
தற்போது 6வது திருமண நாள் வர ரியோ ராஜ் மனைவிக்கு வாழ்த்து கூறி அழகிய புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.
அதில் தனது மகளிக் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட அட ரியோவின் மகளா இவர் நன்றாக வளர்ந்துவிட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
44 வயதிலும் இளம் நடிகைக்கு சவால் விடும் நடிகை மஞ்சு வாரியர் போட்டோ ஷுட்- அசந்துபோன ரசிகர்கள்