புதிய கார் வாங்கிய பிரபல நடிகர் ஆர்.ஜே.பாலாஜி- மனைவியுடன் அவர் கொடுத்த போஸ்
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி
நடிகராக இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன் பிரபல வானொலியில் பணியாற்றி வந்தபோதே இவர் மக்களிடம் பிரபலம்.
2013ம் ஆண்டு புத்தகம் என்ற படம் பின்னணியில் பேசி தனது பயணத்தை தொடங்கிய இவர் அடுத்து சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
அதன்பிறகு தீயா வேலை செய்யனும் குமாரு என்ற படத்தில் துணை நடிகராக நடிக்க தொடங்கிய பாலாஜி 20 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 2019ம் ஆண்டு எல்கேஜி படம் மூலம் நாயகனாக நடிக்க தொடங்கிய இவர் மூக்குத்தி அம்மன் என்ற படம் மூலம் இயக்குனர் அவதாரமும் எடுத்தார்.
அண்மையில் ஆர்.ஜே.பாலாஜி நடித்த வீட்ல விசேஷம் திரைப்படம் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தியது.
புதிய கார்
சினிமாவில் கலக்கும் பாலாஜி கிரிக்கெட் பணியிலும் தொடர்ந்து வேலை செய்து வருகிறார். தற்போது ஆர்.ஜே.பாலாஜி புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளாராம். மனைவியுடன் புதிய கார் பக்கத்தில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஆனால் இது எந்த வந்த புகைப்படம், இப்போது வாங்கிய காரா என்பது சரியாக தெரியவில்லை.
10 நாள் முடிவில் நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் செய்த மொத்த வசூல்- முழு விவரம்