புதிய தொடரில் கமிட்டாகியுள்ள விஜய் டிவியின் மோதலும் காதலும் சீரியல் நாயகன்... வெளிவந்த அறிவிப்பு
விக்ரம் வேதா
விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி உள்ளது, அதில் ஒன்று தான் மோதலும் காதலும்.
முதலில் விக்ரம் வேதா என்று பெயர் வைத்துள்ளனர், ஆனால் பட பெயர் இருப்பதால் பின் மாற்றிவிட்டனர்.
அதோடு இந்த தொடரின் கதை இதற்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரின் கதை போலவே உள்ளது என நிறைய விமர்சனம் வந்தது.
2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் முடிவுக்கும் வந்துவிட்டது.
புதிய தொடர்
மோதலும் காதலும் தொடரில் நாயகனாக நடித்துவந்த சமீர் இந்த சீரியல் முடிந்ததும் தனது மனைவியுடன் இணைந்து Mr&Mrs Chinnathirai நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வந்தார்.
தற்போது அந்த நிகழ்ச்சி முடிவடைய சமீரின் புதிய தொடர் குறித்த தகவல் வந்துள்ளது. பூங்காற்று திரும்புமா என்று பெயரிடப்பட்டுள்ள புதிய தொடரில் தான் சமீர் கமிட்டாகியுள்ளாராம், விஜய் டிவியிலேயே தான் இந்த தொடர் வர இருக்கிறது.
மற்றபடி புதிய சீரியல் குறித்து வேறு எந்த தகவலும் இல்லை.