நடிகர் சந்தானத்தின் வாழ்க்கை வரலாறு
சந்தானம்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நட்சத்திரங்களில் ஒருவர் சந்தானம். இன்று தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் இவரின் வாழ்க்கை வரலாறு குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
வாழ்க்கை வரலாறு
1980ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதி நீலமேகம் - பொண்ணுகன்னு தம்பதிக்கு பிறந்தவர் தான் சந்தானம். இவர் வளர்ந்தது எல்லாம் சென்னையில் பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் தான்.
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சியான லொள்ளு சபா மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களை ஸ்பூப் செய்து அசத்துவார்.
சின்னத்திரையில் கலக்கி கொண்டு இருந்தார் நடிகர் சந்தானம் 2004ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த மன்மதன் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தார். முதல் படமே நல்ல வரவேற்பை இவருக்கு பெற்று கொடுத்தது.
இதன்பின் அஜித்துடன் பில்லா, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், சூர்யாவுடன் சிங்கம் 2, ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல ஷக்தி என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்தார்.
தொடர்ந்து நகைச்சுவை நாயகனாக நடித்து அசத்தி வந்த இவர் திடீரென கதாநாயகன் அவதாரம் எடுத்தார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கிய சந்தானம் தற்போது வரை ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார்.
தில்லுக்கு துட்டு, A1, டிடி ரிட்டர்ன்ஸ் என ஹீரோவாகவும் படங்களை கொடுத்துள்ளார். சந்தானம் 2004 இல் உஷாவை மணந்தார். இது அவர்களின் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri
