சென்னையில் முக்கிய இடத்தில் பெரிய வீட்டை வாங்கிய நடிகர் சந்தானம்- விலை இத்தனை கோடியா?
நடிகர் சந்தானம்
சந்தானம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் தனக்கென்று ஒரு ஸ்டைல் வைத்து பயணித்தவர். அவரது ஸ்டைலையும் ரசித்த ரசிகர்களால் எல்லா தயாரிப்பாளரும் தங்களது படத்தில் கண்டிப்பாக சந்தானம் வேண்டும் என தொடர்ந்து புக் செய்து நடிக்க வைத்தார்கள்.
அப்படியே அவரது டிராக் இருந்திருந்தால் இன்னும் நிறைய படங்கள் நடித்திருப்பார், ஆனால் அவர் இப்போது நாயகனாக மட்டுமே படங்கள் நடித்து வருகிறார்.
சின்னத்திரையில் ஆரம்பித்த அவரது பயணம் ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ், சிம்பு, சூர்யா, விக்ரம், கார்த்தி ஆகியோரின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது.
கடந்தாண்டு டிக்கிலோனா, சபாபதி படங்களில் நடித்திருந்த சந்தானம், இந்தாண்டு குலுகுலு, ஏஜெண்ட் கண்ணாயிரம் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பிரம்மாண்ட வீடு
தற்போது நடிகர் சந்தானம் சென்னையின் முக்கிய இடமாக கருதப்படும் மறைந்த ஜெயலலிதா, ரஜினிகாந்த், தனுஷ் என பலர் இருக்கும் போயஸ் கார்டன் இடத்தில் ஒரு பிரம்மாண்ட வீடு விலைக்கு வந்துள்ளது.
அதை பல கோடி கொடுத்து நடிகர் சந்தானம் வாங்கியுள்ளாராம். இதனையடுத்து அவரது ரசிகர்கள் சந்தானத்துக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
பிக்பாஸ் 6 வீட்டிற்குள் நுழையப்போகும் யாருமே எதிர்ப்பார்க்காத பிரபலம்- TRP எகிற போகுது