46வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் சந்தானம்.. இவருடைய மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா
சந்தானம்
சின்னத்திரையிலிருந்து தற்போது பலரும் வெள்ளித்திரையில் நடிக்க வருகிறார்கள். ஆனால், அவர்கள் யாவரும் வெற்றிக்கனியை பறிக்கிறார்களா என்பதே கேள்விக்குறிதான். அப்படி சின்னத்திரையிலிருந்து வந்து வெள்ளித்திரையில் மாபெரும் உச்சத்தை தொட்ட முதல் நட்சத்திரம் நடிகர் சந்தானம்தான்.

முதலில் நகைச்சுவை நடிகராக பல திரைப்படங்களில் பட்டையை கிளப்பி, பின் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். இன்று தனக்கென்று தனி இடத்தை ஹீரோவாக தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளார்.
சொத்து மதிப்பு
இவ்வளவு பெரிய இடத்தை தமிழ் திரையுலகில் பிடித்துள்ள நடிகர் சந்தானத்தின் பிறந்தநாள் இன்று. தனது 46வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் சந்தானத்திற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இவருடைய மொத்த சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் சந்தானத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 100 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 15 கோடிவரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.