நடிகர் சந்தானம் சமீபத்தில் அணிந்துவந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா?... இத்தனை கோடியா?
சந்தானம்
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகர் சந்தானம்.
காமெடி நடிகராக கொடிகட்டி பறந்த இவர் ஒரு கட்டத்தில் நாயகனாக நடிக்க ஆசைப்பட்டு கலக்கினார். காமெடியனாக நடிப்பதை நிறுத்தி ஹீரோவாக தான் நடிக்கும் படங்களில் காமெடி செய்து வந்தார்.
சமீபத்தில் சந்தானம் நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வெளியாகி இருந்தது. பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியானாலும் ஓரளவு வரவேற்பு தான் பெற்றது.
வாட்ச் விலை
நடிகர் சந்தானம் ஒரே ஒரு நடிகரின் படத்தில் காமெடியனாக எப்போது கூப்பிட்டாலும் நடிப்பேன் என்பார், வேறு யாரும் இல்லை நடிகர் சிம்புவுடன் தான்.
தற்போது சந்தானம், டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியின் போது அணிந்துவந்த வாட்ச் விலை தான் வைரலாகி வருகிறது.
சந்தானம் அணிந்துவந்த வாட்ச் பிராண்ட் Richard Mille, RM 011, இதன் விலை ரூ. 2 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது.

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
