நடிகர் சரத்பாபு இறந்துவிட்டதாக பரவிய செய்தி! குடும்பத்தினர் விளக்கத்தால் ரசிகர்கள் நிம்மதி
அண்ணாமலை உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கும் சரத்பாபு கடந்த சில மாதங்களாக தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார்.
செப்சிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட அவரது உடலின் உள் உறுப்புக்கள் செயலிழந்ததால் கடந்த சில வாரங்களாக வென்டிலேட்டர் உதவி உடன் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்து இருப்பதாக சற்று முன் செய்தி பரவியது. ஆனால் அது வெறும் வதந்தி தான் என்பது தெரியவந்திருக்கிறது.
வதந்தி
ஆனால் இது உண்மையில்லை என சரத்பாபுவின் குடும்பத்தினர் விளக்கம் அளித்து இருக்கின்றனர். அவர் இன்னும் ஹாஸ்பிடலில் சிகிச்சையில் தான் இருக்கிறார் என தெரிவித்து இருக்கின்றனர்.
குஷ்பு, பிரபுதேவா உள்ளிட்ட பல பிரபலங்கள் சரத்பாபுவுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்த நிலையில், வதந்தி என தெரிந்ததும் நீக்கிவிட்டனர்.
ரஜினியை மீண்டும் தாக்கி பேசிய ரோஜா! அரசியலுக்கு வரேன் வரேன்னு சொல்லிட்டு ஓடியா போனேன்?

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
