வயதானாலும் பிட்டாக இருக்க சரத்குமாரின் ஸ்பெஷல் டயட்... அவரே சொன்ன தகவல்
சரத்குமார்
சரத்குமார், சினிமாவில் வில்லனாக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர்.
மிஸ்டர் மெட்ராஸ் என்ற பட்டத்தை வென்றவர் சினிமாவில் வில்லனாக களமிறங்கி நாயகனாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். பல ஆக்ஷன் படங்களில் நடித்துள்ள சரத்குமாருக்கு சூர்யவம்சம் உள்ளிட்ட படங்கள் சிறப்பான வரவேற்பை கொடுத்தது.
70 வயதிலும் சரத்குமார் கேரக்டர் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.

பிட்னஸ்
நடிகர் சரத்குமாரின் நடிப்பு, அரசியலை தாண்டி அவரது பிட்னஸ் பார்த்து ரசிகர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டுள்ளனர்.
அவரது பிட்னஸ் சீக்ரெட் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்ப அதற்கு அவர் பதில் அளித்துள்ளார். காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடித்துவிட்டு பிளாக் காபியில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து சாப்பிடுவேன்.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்துவிட்டு 9 மணியளவில் 4 முட்டைகளின் வெள்ளைக்குரு, 11 மணியளவில் ஏபிசி ஜுஸ் குடிக்கும் சரத்குமார் மதிய உணவாக இரண்டு பீஸ் சிக்கன் அத்துடன் காய்கறிகளையும் வேக வைத்து சாப்பிடுவாராம்.

4 மணிக்கு வேர்க்கடலை, 7 மணியளவில் சிக்கன் அல்லது மட்டன் சூப் அதோது உணவை முடித்துக் கொள்வேன். தினந்தோறும் 3 லிட்டர் தண்ணீர் இதுதான் உணவு பழக்கம் என கூறியுள்ளார்.