இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சசிகுமாரின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா
நடிகர் சசிகுமார்
திரையுலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முக திறமை கொண்டவர் சசிகுமார். இயக்குனர் பாலாவிடம் துணை இயக்குனராக பணிபுரிந்து பின் சினிமாவில் இயக்குனராக களமிறங்கினார். 'சுப்ரமணியபுரம்' என்ற படத்தை இயக்கியும், நடித்தும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்ததால் பிரபல நடிகராக சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து பிரபலமானார்.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பிரம்மன்,உடன்பிறப்பே, எம்ஜிஆர் மகன், அயோத்தி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
சசிகுமாரின் சொத்து மதிப்பு
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டு விளங்கும் சசிகுமார் இன்று தனது 50 -வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்கு ரசிகர்கள், சினிமா நட்சத்திரங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், காதல், சென்டிமென்ட், நகைச்சுவை, ஆக்ஷன் என அனைத்துக்கும் பொருத்தமான நடிப்பை வழங்கும் திறமைபெற்ற சசிகுமாரின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இவருடைய சொத்து மதிப்பு சுமார் ரூ. 35 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
