காமெடி நடிகர் செந்திலின் சொந்த ஊர் மற்றும் பழைய வீட்டை பார்த்துள்ளீர்களா?- அழகிய வீடு
செந்தில் தமிழ் சினிமா கொண்டாடிய காமெடி நடிகர். இவரும் கவுண்டமணி அவர்களும் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் அனைத்துமே மக்களிடம் பெரிய வரவேற்பு பெற்றன.
இப்போதும் அவர்களது காமெடி காட்சிகளை ரசிக்கும் ரசிகர்கள் உள்ளார்கள். இவர்களது கூட்டணி போல் பலர் காமெடிகள் செய்கின்றனர், ஆனால் இவர்களுக்கு கிடைத்த ரீச் போல் இல்லை.
கவுண்டமணி உடல்நிலை காரணமாக சினிமா பக்கம் வருவதில்லை என்றாலும் செந்தில் மட்டும் அவ்வப்போது கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார்.
கடைசியாக 2019ம் ஆண்டு வெளியான பிஸ்தா என்ற படத்தில் நடித்திருக்கிறார், அதன்பிறகு எந்த படமும் நடிக்கவில்லை.
சமீபத்தில் மட்டும் செந்திலின் பேத்தி அவரது காமெடியை அவருக்கு முன்பே டப்ஸ்மேஷ் செய்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.

செந்திலின் சொந்த வீடு
சென்னையில் சொந்தமாக வீடு கட்டி மகன்களுடன் வசித்துவரும் செந்திலுக்கு தனது சொந்த ஊரிலும் வீடுகள் உள்ளது. தனது பழைய வீட்டையும் அப்படியே பாதுகாத்து வருகிறார். இவரது வீடு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இளஞ்செம்பூர் என்ற இடத்தில் உள்ளதாம்.
தற்போது அவர் வளர்ந் வீட்டின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது, அந்த பழைய வீட்டின் எதிரிலும் அழகிய புத்தம் புதிய வீட்டையும் செந்தில் கட்டியிருக்கிறார்.
இதோ செந்தில் அவர்கள் பிறந்து, வாழ்ந்து வந்த பழைய வீட்டின் புகைப்படம்,

நடிகை நயன்தாராவின் திருமண புடவையில் இவ்வளவு விஷயங்கள் உள்ளதா?
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri