அச்சச்சோ அவரா, ரொம்ப பயங்கரமான ஆள் ஆச்சே!! காமெடி நடிகர் சேஷுவின் மறுபக்கம்..

Kathick
in பிரபலங்கள்Report this article
சேஷு ஷங்கர்
சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. இப்படத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் லொள்ளு சபா சேஷு ஷங்கர்.
இவர் A1, டிக்கிலோனா, குலு குலு போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக A1 திரைப்படத்தில் இடம்பெறும் 'அச்சச்சோ அவரா, ரொம்ப பயங்கரமான ஆள் ஆச்சே' வசனத்தை பேசி டிரென்ட் ஆனார்.
மேலும் தற்போது வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் இவர் ஆடிய நடனம் ரசிகர்கள் மத்தியில் படுவைரலானது. இதன்மூலம் ரசிகர்களுக்கு இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் சேஷு.

சம்சாரம் அது மின்சாரம் படத்தில் நடித்த இந்த பையனை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க
சேஷுவின் மறுபக்கம்
இந்நிலையில், நகைச்சுவையாக மட்டுமே நாம் பார்த்து வந்த நடிகர் சேஷு, பலரும் தன்னால் முடிந்த நன்மைகளை செய்து வருகிறார். வசதியில்லாத ஆறு பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்துள்ளாராம் சேஷு.
தன்னுடைய நகைச்சுவை பக்கத்தை மட்டுமே ரசிகர்களுக்கு காட்டி வந்த நடிகர் சேஷுவிற்கு இப்படியொரு ஒரு பக்கம் இருக்கிறது என்று பலருக்கும் தெரியாமல் இருக்கிறது.