அட்லீ மீது கோபம் அடைந்த ஷாருக்கான்.. இது தான் காரணமா?
பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் ஷாருக்கான். சில வாரங்களுக்கு முன்பு இவர் நடிப்பில் 'பதான்' திரைப்படம் வெளியானது.
இப்படம் வெளியாகி சில நாட்களிலேயே 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் மூலம் பாலிவுட் சினிமாவே கம்பேக் கொடுத்துள்ளது.
இதையடுத்து ஷாருக்கான் அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
ஷாருக்கான் கோபம்
சமீபத்தில் அட்லீ, ஜவான் படத்தின் பட்ஜெட்டை தாண்டி 14 கோடிக்கும் மேல் செலவை ஏத்திவிட்டாராம். இதனால் ஷாருக்கான் அட்லீ மீது கோபம் அடைத்துள்ளாராம்.
தற்போது அட்லீ மனக்குழப்பத்தை போக்க 3 நாள் பயணமாக சென்னை வந்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகர் ஷாருக்கானின் முழு சொத்து மதிப்பு.. நீங்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத தொகை