பாலிவுட் சினிமா நடிகர்களில் ராஜ வாழ்க்கை வாழும் நடிகர் ஷாருக்கானின் சொத்து மதிப்பு- எத்தனை கோடி தெரியுமா?
நடிகர் ஷாருக்கான்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகனாக பல வருடங்களாக கலக்கி வரும் ஹீரோ ஷாருக்கான். இந்த ஆண்டு அவருக்கு சூப்பராக அமைந்துள்ளது, காரணம் அவரது படங்கள் அவருக்கு கொடுத்த வெற்றி தான்.
பதான் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது, ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்தது. பின் செப்டம்பர் மாதமே ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் வெளியாகி இருந்தது.
அந்த படமும் ரூ. 1000 கோடிக்கு வசூலை குவித்தது. இப்போது ஷாருக்கான் நடிப்பில் டுங்கி திரைப்படம் வருகிற டிசம்பர் 22ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இப்படமும் கண்டிப்பாக ஷாருக்கானுக்கு ஹிட் படமாக அமையும் என்கின்றனர்.
சொத்து மதிப்பு
இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ஷாருக்கானின் சொத்து மதிப்பு குறித்து தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. நடிகர் ஷாருக்கான் உலகளவில் அதிகப்படியான சொத்துக்களை கொண்ட நடிகர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார்.
இவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ.6 ஆயிரத்து 300 கோடியாம். மும்பை, துபாய், லண்டன் என வீடுகள், Red Chillies தயாரிப்பு நிறுவனம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என்கிற ஐபிஎல் அணி, நிறைய சொகுசு கார்கள் என வைத்துள்ளார்.

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu
