சீரியல் நடிகையை தகாத முறையில் பேசியுள்ள அசீம்- கடைசியில் கிடைத்த தண்டனை, வெளிவராத தகவல்
பிக்பாஸ் 6
பிக்பாஸ் 6வது சீசனில் மக்கள் எதிர்ப்பார்க்கப்பட்ட போட்டியாளராக கலந்துகொண்டவர் சீரியல் நடிகர் அசீம். இவர் கடந்த 5வது சீசனிலேயே கலந்துகொள்ள வேண்டியது, ஆனால் கடைசி நேரத்தில் அது மிஸ் ஆனது.
இந்த சீசனில் நுழைந்த ஆரம்பம் முதல் அசீம் இப்படிதான் என்ற எண்ணம் மக்களிடம் வந்துவிட்டது. அவர் அதிகம் சண்டை போடுவது, விவாதம் செய்வது என நிறைய கோபத்தை ஏற்படுத்தும் செயல்களை செய்து வந்தார்.
இப்போது கொஞ்சம் மாறியிருப்பதாக தெரிகிறது.
தவறாக பேசிய அசீம்
நடிகர் அசீம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே உனக்காக என்ற தொடரில் நடித்திருக்கிறார். அந்த தொடரில் நாயகியாக நடித்தவரை தகாத வார்த்தையில் அசீம் பேசியிருக்கிறார்.
இதனால் அந்த நாயகி மற்றும் மற்ற பெண்கள் அசீம் மன்னிப்பு கேட்டால் தான் நடிப்போம் என கூறியிருக்கின்றனர். தயாரிப்பாளர் அசீமிற்கு ஆதரவாக பேச பெண்கள் உறுதியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறிய பின்னரே அசீம் மன்னிப்பு கேட்டார்.
பிக்பாஸில் அவர் தனது உண்மையான முகத்தை தான் காட்டி வருகிறார் என அவருடன் தொடரில் நடித்த அருண் என்பவர் கூறியிருக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து கோபியை மாற்றிவிட்டார்களா?- இனி இவர் தான் நடிக்கப்போகிறாரா?