பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து கோபியை மாற்றிவிட்டார்களா?- இனி இவர் தான் நடிக்கப்போகிறாரா?
பாக்கியலட்சுமி
இந்த தொடர் தான் இப்போது ஹிட் லிஸ்டில் டாப்பில் உள்ளது. பெங்காலியில் ஒளிபரப்பான ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக் தான் பாக்கியலட்சுமி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
தற்போது கதையில் கோபி தனது புதிய வாழ்க்கையை கஷ்டப்பட்டு கடக்க பாக்கியலட்சுமி தனது தொழில் மற்றும் குடும்பத்தை மிகவும் தைரியமாக பார்க்க தொடங்கியிருக்கிறார்.
செழியன் அப்பாவாக போகும் விஷயம் குடும்பத்திற்கு தெரிய வர கோபியின் அப்பா தாத்தா தாத்தா என்று கூறி அவரை வெறுப்பேற்றி வருகிறார். கடந்த சில வாரங்களாக கோபியின் நடிப்பும் அட்டகாசமாக உள்ளது, ரசிகர்களும் ரசித்து வருகிறார்கள்.
புதிய கோபி
இப்போது சமூக வலைதளங்களில் ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மாவுடன் புதியதாக சீரியல் நடிகர் சஞ்சீவ் இருப்பது போல் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் என்ன கோபி வேடம் மாற்றப்பட்டதா என ஷாக் ஆகியுள்ளனர்.
ஆனால் உண்மை என்னவென்றால் ரேஷ்மா மற்றும் சஞ்சீவ் இருவரும் இணைந்து விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளனர். ரேஷ்மா ராதிகா கெட்டப்பில் இதில் நடித்ததால் ரசிகர்களிடம் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
கியூட்டான நடிகை பூஜாவின் கணவரை பார்த்துள்ளீர்களா?- இலங்கையில் தான் உள்ளாரா?

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
