சர்வானந்த்
தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர் சர்வானந்த். அவர் தமிழில் சமீபத்தில் வெளியான கணம் என்னும் படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார். இதற்கு முன்பே 2015ல் அவர் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை என்ற தமிழ் படத்தில் நடித்து இருந்தார்.
தற்போது 38 வயதாகும் சர்வானந்த் அவரது காதலியை நிச்சயத்தார்த்தம் செய்து இருக்கிறார்.
நிச்சயதார்த்தம்
அமெரிக்காவில் ஐடி துறையில் பணியாற்றி வரும் ரக்ஷிதா ரெட்டி என்ற பெண்ணை தான் சர்வானந்த் திருமணம் செய்கிறார். அவர்கள் காதலித்து வந்த நிலையில் தற்போது பெற்றோர் அனுமதி உடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது.
தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஒரு பிரபல அரசியல்வாதியின் உறவினர் தான் ரக்ஷிதா ரெட்டி எனவும், அவரது அப்பா ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக இருக்கிறார் என்றும் தகவல் வந்திருக்கிறது.
தற்போது இணையத்தில் வைரல் ஆகும் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் இதோ..



500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி News Lankasri
