நடிகர் ஷ்யாமிற்கு அஜித் கொடுத்த அழகிய பரிசு- என்ன தெரியுமா, பிரபலமே கூறிய தகவல்
நடிகர் அஜித்
கடந்த வருடம் வலிமை என்ற படத்தை கொடுத்த நடிகர் அஜித் இப்போது துணிவு என்ற சூப்பர் படத்தை கொடுத்துள்ளார்.
எச்.வினோத், போனி கபூர் மற்றும் அஜித் இவர்களது கூட்டணியில் வெளியாகி இருக்கும் 3வது படம் இது.
இப்படம் வங்கி கொள்ளை பற்றிய கதையை மையமாக கொண்டது, வங்கிகளில் நடக்கும் சில விஷயங்கள் குறித்தும் இப்படம் தெளிவாக பேசுகிறது.
அஜித் மிகவும் தரமான கதையில் நடித்துள்ளார் என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
அஜித்-ஷ்யாம்
விஜய்யின் வாரிசு படத்தில் நடித்துள்ள நடிகர் ஷ்யாம் நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார். அதில் ஒரு பேட்டியில் பேசும்போது, நடிகர் அஜித் அவர்கள் எனது முதல் படமான 12 பி படத்தை பார்த்துவிட்டு என்னை பாராட்டினார்.
பின் எனது திருமணத்திற்கு அவரை அழைக்க ஏவிஎம் சென்று அழைத்தேன். எனது திருமணத்திற்கு ஷாலினி அவர்களுடன் வந்தார், எனக்கு ஒரு மொபைல் போனை பரிசாக கொடுத்தார்.
அதை இப்போதும் பத்திரமாக வைத்திருப்பதாக ஷ்யாம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
6 நாட்களாக தொடரும் கடும் போட்டி.. டாப் இடத்தில் இருப்பவர் விஜய்யா, அஜித்தா

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
