Global Web Seriesல் நடிக்கும் நடிகர் சித்தார்த்... சூப்பர் நியூஸ்
சித்தார்த்
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் சாக்லெட் பாயாக கொண்டாடப்பட்ட நடிகர் சித்தார்த்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் படங்கள் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
சித்தார்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்களில் சித்தா மற்றும் 3BHK போன்ற படங்கள் உணர்ச்சி வசப்பட வைத்த கதையாக அமைந்தது. விமர்சன ரீதியாக படத்திற்கும், சித்தார்த் நடிப்பிற்கும் பெரிய பாராட்டுக்களை கிடைத்தன.
குட் நியூஸ்
இந்திய சினிமாவில் கலக்கிவந்த சித்தார்த் இப்போது சர்வதேச மேடையில் புதிய அத்தியாயம் தொடங்க இருக்கிறார்.
ஜும்பா லஹிரியின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்பு அடிப்படையாக உருவாகும் நெட்ஃபிளிக்ஸ் குளோபல் சீரிஸ் Unaccustomed Earthல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
இந்த சீரிஸில் சித்தார்த் அமித் முகர்ஜி என்ற கேம்பிரிட்ஜ், மாசசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த பெங்காலி-அமெரிக்க இளைஞராக நடிக்கிறார்.