அரசன், அஸ்வத் படத்திற்கு பிறகு சிம்பு யாருடன் கூட்டணி அமைக்கிறார் தெரியுமா?... செம கூட்டணியா இருக்குமே...
நடிகர் சிம்பு
கொரோனா காலத்தை பயன்படுத்தி தன்னை மொத்தமாக மாற்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தவர் தான் நடிகர் சிம்பு.
ஒல்லியாக மாறியவர் பழையபடி தன் மீது இருந்த விமர்சனங்களை எல்லாம் மாற்றி அடுத்தடுத்து புதிய படங்கள் நடித்து வருகிறார். இப்போது சிம்பு அரசன திரைப்படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகின்றார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் 2ம் கட்ட படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்க உள்ளது. கலைப்புலி தாணு மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகும் என கூறப்படுகிறது.
புதிய கூட்டணி
இந்த நிலையில் சிம்பு, இந்தியளவில் பிரபலமான ஏ.ஆர்.முருகதாஸின் கதையை ஓகே செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அரசன் படத்தை முடித்த கையோடு சிம்பு-ஏ.ஆர்.முருகதாஸுடன் கூட்டணி அமைக்கிறார் என்றும் அப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார் என கூறப்படுகிறது.

கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri